ஈடிவி பாரத் ஊடகத்திடம் சமூக ஆர்வலர் மனோகரன் பேசியதாவது, "ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1848இல் ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, நீலகிரி வனப்பகுதிகளில் வளர்க்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் யூகலிப்டஸ் மரங்கள் வளர்த்துள்ளன.
ஆண்டுதோறும் பருவமழை காலங்களில், இந்த மரங்களால் வீடுகள் இடிகின்றன. மனிதர்கள் உயிரிழக்கின்றனர். ஆண்டிற்கு ஐந்தாயிரம் லிட்டர், நிலத்தடி நீரை யூகலிப்டஸ் மரங்கள் உறிஞ்சுவதால், நீர்வளம் பாதிப்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த மரங்களால் நீலகிரியின் சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விட்டது.