நீலகிரி மாவட்டத்தில் 60 ஆயிரத்தும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள 120 தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலையை வழங்கி வருகின்றனர். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச தேயிலை ஏலம் இன்று (ஜூன் 21) ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இதையடுத்து, குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ.சி ஏல மையத்தில் பல்வேறு தொழிற்சாலைகளின் சிறப்பு தேயிலை தூள்கள் ஏலத்திற்கு வந்தன. இதில் குன்னூர் பில்லிகம்பை எஸ்டேட்டில் உள்ள அவெட்டா நிறுவனத்தின் 'சில்வர் டிப்ஸ்' எனப்படும் 'வொயிட் டீ 'ஏலத்திற்கு வந்தது.