நீலகிரி: உதகை வேலி வியூ பகுதியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நின்று அங்குள்ள பள்ளத்தாக்கு காட்சிகளைக்கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த எட்டு நாள்களாக உதகையில் அவ்வப்போது பெய்து வந்த மழையின் காரணமாக இங்கு உள்ள தேநீர் கடையில் தடுப்புச்சுவர் பலவீனமாக காணப்பட்டது.
Video - கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் - பதைபதைப்பை ஏற்படுத்தும் காட்சி
நீலகிரி மாவட்டம், வேலி வியூ பகுதியில் கனமழை காரணமாக தேநீர் கடையின் சுற்றுச்சுவர் இடிந்து கீழே விழுந்தது. இந்தக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Etv Bharat கனமழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்
இந்நிலையில் இன்று (ஆக. 11) திடீரென அந்த தடுப்புச்சுவர் இடிந்து, கீழே உள்ள வீடுகளின் மேல் விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. தடுப்புச்சுவர் இடிந்து விழும் காட்சியினை அங்குள்ளவர்கள் நேரடியாகப் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:Video - 'சாமி என்னை மன்னிச்சிரு'; ஆட்டையைப்போட்ட பின் கடவுளிடம் மன்னிப்புக்கேட்ட 'மகா'திருடன்