தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டெருமை தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு - bison attack news

நீலகிரி: கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காட்டெருமை தாக்குதல்
காட்டெருமை தாக்குதல்

By

Published : Mar 14, 2020, 12:44 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அதன் சுற்றுவட்டாராப் பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பொதுமக்களை தாக்குவது அடிக்கடி செய்திகளாகி வருகின்றன. இந்த, மனித-விலங்கு மோதலில் மேலும், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கோத்தகரி அருகே ஜக்கனாரை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் மனைவி பார்வதி (55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார்.

காட்டெருமை தாக்குதல்

இந்நிலையில், வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த பார்வதியை, தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைகளில் ஒன்று திடீரென தாக்கியது. ஆக்ரோஷத்துடன் கொம்பால் குத்தியதால், பார்வதி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி

ABOUT THE AUTHOR

...view details