இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயசங்கர் கூறியதாவது:
"நீலகிரி மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, இன்று காலை முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான பணி தொடங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன், இன்று மாலை வாக்குச்சாவடிகளை சென்றடையும்" என்றார்.
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்!