நீலகிரியிலுள்ள உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டப்பேரவை தேர்தலில் 69.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
பின்னர், இந்த இயந்திரங்கள் அனைத்தும் தனி தனி அறைகளில் வைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பு அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர் மூன்று தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கபட்டுள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில், 3 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசன்ட் திவ்யா கூறுகையில், “வாக்கு பெட்டிகள் வைக்கபட்டுள்ள அறைகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளன. 102 நவீன கேமராக்கள் பொறுத்தபட்டு, 308 காவலர்களை மூலம் சுழற்ச்சி முறையில் கண்காணிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் 2021: வாக்குப்பதிவில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!