நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவு இல்லாமல் இருந்ததால் நோயாளிகள் கோவை, ஊட்டிக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில் தன்னார்வலர்கள் மூலம் 70 லட்சம் ரூபாய் செலவில் டயாலிசிஸ் கருவி அமைக்கப்பட்டு ஆறு நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு இத்தகைய முயற்சி மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
குன்னூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி தொடர்ந்து, இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை இப்பகுதியிலே கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பல்வேறு தன்னார்வலர்கள் ஒரு புதிய முயற்சியாக டயாலிசிஸ் பிரிவினை குன்னூர் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தித் தந்துள்ளதற்குப் பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியரும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் மருத்துவர் பழனிசாமி, பல்வேறு தன்னார்வலர்கள் உள்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:இந்திய கரோனாவுக்கு புதிய பெயர்!