தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

viral video: சாவகாசமாக வாக்கிங் போகும் விலங்குகள்! - குன்னூரில் குடியிருப்பு பகுடிகளில் விலங்குகள் நடமாட்டம்

குன்னூர் நகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில், காட்டு விலங்குகள், சாவகாசமாக நடந்துசெல்லும் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

wild animals walking in road side at coonoor  coonoor wild animals walking  wild animals in road side at coonoor  wild animals walking in residential area  wild animals walking in residential area at coonoor  viral video of wild animals  வாக்கிங் போகும் விலங்குகள்  குன்னூரில் குடியிருப்பு பகுடிகளில் விலங்குகள் நடமாட்டம்  சாலையில் விலங்குகள் நடமாட்டம்
சாவகாசமாக நடந்து செல்லும் விலங்குகள்

By

Published : Feb 9, 2022, 2:13 PM IST

நீலகிரி:குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வன விலங்குகள் சாதராணமாக குடியிருப்புப் பகுதிகளில் உலா வருகின்றன. மேலும் இரவு நேரங்களில், சாவகாசமாக அதிகம் நடமாடிவருகின்றன.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 8) இரவு, குன்னூர் கரிமரா பகுதியில், பிரகாஷ் என்பவரின் பங்களா வளாகத்தின் வெளியே கரடிகளும், சிறுத்தையும் உலா வரும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.

சாவகாசமாக நடந்துசெல்லும் விலங்குகள்

இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டு, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் மீண்டும் இந்தப் பகுதிக்கு சிறுத்தை வந்தால் கூண்டுவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சில்லக்குடி ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்!

ABOUT THE AUTHOR

...view details