தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோத்தகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் - Nilgiri district

கோத்தகிரியில் கொட்டும் மழையில் பெத்தளா கிராமத்தில் அறநிலையத்துறையை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

கோத்தகிரியில் உண்ணாவிரதப் போராட்டம்
கோத்தகிரியில் உண்ணாவிரதப் போராட்டம்

By

Published : Oct 11, 2021, 4:38 PM IST

Updated : Oct 11, 2021, 4:59 PM IST

நீலகிரி: கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் குலதெய்வமான எத்தையம்மன் மனையே படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அறநிலையத்துறை இந்தக் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்பு பலகை கொண்டு வந்து வைத்துள்ளனர். இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் நேற்று(அக்.10) முதற்கட்டமாக, அறநிலையத்துறை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து இதற்கு உறுதுணையாக இருந்த நடுஹட்டி கைகாரு தலைவர் நஞ்சன் என்பவரை உடனடியாக பதவியிலிருந்து விலக கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இன்று(அக்.11) மழையையும் பொருள்படுத்தாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரியில் உண்ணாவிரதப் போராட்டம்

மேலும் கலாசார பாடல்களை பாடி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது கலாசாரத்தை சீரழிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், அறநிலையத்துறை உடனடியாக பாரம்பரிய கோயிலை மீட்பு நடவடிக்கையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி

Last Updated : Oct 11, 2021, 4:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details