தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அலுவலகங்களில் பணம் வசூலிக்கபடுவதாக நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் உதகை அரசு ரோஜா பூங்கா அருகே உள்ள மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கணக்கில் வராத 67 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை கைப்பற்றினர். அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், வேளான் அலுவலர்களிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.