நீலகிரி: வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று (ஏப். 29) இடியுடன் கூடிய கனமழை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. குறிப்பாக நகரைச் சுற்றியுள்ள தலைகுந்தா, கல்லட்டி, நஞ்சநாடு, கப்பதொரை, முத்தோரை, பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.