தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு குட்டிகளை சுமந்தபடி சாலையை கடக்கும் கரடி... - crossing the roads

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரண்டு குட்டிகளை சுமந்தபடி கரடி சாலையை கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நீலகிரியில் பகல் நேரத்தில் அசால்ட்டாக சாலையை கடக்கும் கரடிகள்
நீலகிரியில் பகல் நேரத்தில் அசால்ட்டாக சாலையை கடக்கும் கரடிகள்

By

Published : Jun 14, 2022, 12:21 PM IST

Updated : Jun 14, 2022, 1:25 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் உணவை தேடி வரும் கரடிகளின் நடமாட்டம் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து கேத்தரின் நீர் வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் தாய் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக சுமந்து சாலையை கடந்து எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு செல்கிறது.

இரண்டு குட்டிகளை சுமந்தபடி சாலையை கடக்கும் கரடி...

இக்காட்சிகளை அவ்வழியே வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் செல்போன்களில் படம் பிடித்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏன் அமல்படுத்தக்கூடாது - நீதிமன்றம் கேள்வி


Last Updated : Jun 14, 2022, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details