நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டர் மூலம் வருவதாக இருந்தது. ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால் அவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு குடியரசு துணைத்தலைவர் வருகை - nilgiris
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்து சேர்ந்தார்.
குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு துணை ஜனாதிபதி வருகை
இந்நிலையில் இன்று கோவையில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாகவே குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், அங்கிருந்து சாலை வழியாக கார் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு நாளை நடைபெற தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மே 20-ந்தேதி வரை அவர் ஊட்டியில் தங்கவுள்ளார்.
இதையும் படிங்க: 5 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த துணை குடியரசுத்தலைவர்!
Last Updated : May 17, 2022, 5:09 PM IST