கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. அந்த தொழில்நுட்பம் குறித்து போதிய கல்வியறிவு இல்லாததால் வேலைவாய்ப்புகள் குறைந்துவருகிறது. இதனால் உயர்கல்வி படித்த மாணவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேகமாக வளர்ந்துவரும் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்நாடு மாணவர்களை தயார்படுத்தி அதன்மூலம் அனைத்து துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய கல்விமுறையை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. இதனையடுத்து புதிய கல்விமுறையை உருவாக்குவதற்கான உயர்கல்வி மாநாடு உதகையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்நாடு மாணவர்கள் கார்ப்ரேட் துறை, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில், எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் செய்யபட்டு புதிய கல்விமுறை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கபட்டது.