தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காயம்பட்ட காட்டுயானைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள்!

முதுமலையில் கிரால் கூண்டில் அடைக்கப்பட்ட காயமடைந்த யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.

By

Published : Jun 19, 2021, 9:41 PM IST

காயம்பட்ட நீலகிரி காட்டுயானை
காயம்பட்ட நீலகிரி காட்டுயானை

நீலகிரி:நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மார்தோமா நகர், ஈப்பங்காடு, மேல் கூடலூர் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக காயத்துடன் கூற்றி திரிந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்ததுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.

கும்கி யானையின் உதவி

அந்த யானைக்கு ஏற்பட்ட காயத்திற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்துகளை வைத்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு அந்த யானையை கூடலூர் அருகே மார்தோமா நகர் பகுதியில் பிடித்தனர்.

அந்த யானையை முதுமலை புலிகள் காப்பக பகுதியில் இருந்த கொண்டு வரப்பட்ட ஐந்து கும்கி யானைகளின் உதவியோடு மருத்துவ குழு முதலுதவி சிகிச்சை அளித்தது.பின்னர், யானைப் பாகன்கள் சாமர்த்தியத்தால், கும்கி யானையின் உதவியுடன் காட்டு யானை வாகனத்தில் ஏற்பட்டது.

யானை நலம்

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம் பகுதிக்கு எடுத்து செல்லபட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிரால் கூண்டில் அக்காட்டு யானை அடைக்கபட்டது.

இன்று (ஜுன் 19) கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர், யானை அடைக்கபட்ட கிரால் கூண்டினுள் சென்று, யானையின் முதுகில் உள்ள காயத்திற்கு ஊசி போட்டு, காயங்களைச் சுத்தம் செய்து சிகிச்சை அளித்தனர். யானை தற்போது உணவு உட்கொண்டு நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: WTC FINAL 21: வெளிச்சமின்மை காரணமாக 2வது முறையாக போட்டி நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details