நீலகிரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால், பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கு: பொதுமக்களுக்கு உணவு வழங்கிய காய்கறி வியாபாரி! - கரோனா தொற்று விவரங்கள்
நீலகிரி: குன்னூர் அருகே காய்கறி வியாபாரி ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலம், முகக்கவசம் வழங்கினார்.
கரோனா ஊரடங்கு: பொதுமக்களுக்கு உணவு வழங்கிய காய்கறி வியாபாரி!
இந்நிலையில், குன்னூர் வெலிங்டன் கண்டோண்மென்ட் வாரிய பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் டிசோசா என்பவர் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூன் 06) 500 பேருக்கு உணவு பொட்டலங்கள் , முகக்கவசங்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் அவரை பாராட்டி வருகின்றனர்.