நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பர்லியார் கேத்தி எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
இதனால் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும் குறிப்பாக கேத்தி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 50 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயார் செய்யப்பட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மலை காய்கறிகள் நீரில் மூழ்கி சேதம் இதேபோல் அம்பேத்கர் நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடியும் அபாய நிலையில் உள்ளன. மேலும் மண் சரிவால் இந்த இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் கலப்பதால், குடிநீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க இப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குன்னூரில் மேகமூட்டம் - பொதுமக்கள் அவதி