நீலகிரி மாவட்டம் உதகை, சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகம், வட மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பப்படுகிறது. பொதுவாக ஓணம் பண்டிகையின் போது அதிகளவில் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்யப்படுவதால் கேரளாவில் நீலகிரி மலை காய்கறிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக உதகையிலிருந்து கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டை கோஸ், பட்டானி போன்ற மலை காய்கறிகளும் ஆங்கில காய்கறிகளான சுகுனி, லீக்ஸ் உள்ளிட்டவைகள் கேராளவிற்கு அதிகமாகச் செல்கிறது.
ஓணம் பண்டிகையால் காய்கறி விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு உதகையிலிருந்து கேரளாவிற்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காய்கறி விலை உயர்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தற்போது காய்கறிகளின் விலை அதிரித்துள்ளது. இதனால் டன் கணக்கில் மலை காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. கேராளவிற்குச் செல்லும் காய்கறிகள் ஒரு கிலோ உருளை கிழங்கு 40 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய், பட்டானி ஒரு கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.