சர்வதேச அளவில் புகழ் பெற்ற, பாரம்பரியம் கொண்ட நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை டி.என். 43 என்ற பெயரில் தனியார் மூலம் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிக்க ஒருவருக்கு ரூ. 3 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனியார் மூலம் மலை ரயில் இயக்கப்படுவதை கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிசம்பர் 13) குன்னூரில் லெவல் கிராசிங் அருகே, மலை ரயிலை மறிக்க 20க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க:முறைமாறி திருமணம்: கணவன் கொலை, மனைவி தற்கொலை