நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகம் சில அடாவடி போக்குகளை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில், இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று (ஆகஸ்ட் 9) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய சிந்தனை செல்வன், “நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் தொழிற்சாலைகளில் எஞ்சி இருப்பது அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மட்டுமே. ஆனால், தற்போது அதையும் இழுத்து மூடுவதற்கு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதே போன்று, வெடி மருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அனைத்தும் வட மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. மேலும், திட்டமிட்டு தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என கூறினார்.
இதையும் படிங்க:Flat வாங்கப் போறீங்களா? - இதைப்படிங்க முதலில்..! கட்டட தரத்தை உறுதி செய்வது எப்படி? சட்டத்தீர்வு என்ன?