தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் மீட்பு! - குன்னூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த சடலம் மீட்பு

நீலகிரி: குன்னூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட காவல் துறையினர் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலத்தை மீட்ட வனத்துறையினர்
சடலத்தை மீட்ட வனத்துறையினர்

By

Published : Mar 4, 2020, 11:13 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியின் சாலை ஓர பள்ளத்தில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவலர்கள் சடலத்தை மீட்க சாலை அருகே உள்ள ஆழமான பள்ளமுள்ள வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் வனத்துறை, தீயணைப்புத்துறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

சுமார் நான்கு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்ட உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட சடலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வன விலங்கு தாக்கி உயிரிழந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டு வீசி எரியப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடலத்தை மீட்ட வனத்துறையினர்

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன குன்னுாா் நான்சா்ச் பகுதியை சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் காா்த்திக் என்பவரா என்னும் சந்தேகத்தின் பேரிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தலை, கைகள் வெட்டப்பட்டு புதருக்குள் கிடந்த இளைஞரின் உடல் - சேலத்தில் கொடூரக் கொலை

ABOUT THE AUTHOR

...view details