தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் விதிமுறைகளை மீறி கட்டிய பங்களாவிற்குச் சீல் - விதிமுறைகளை மீறி கட்டிய பங்களாவிற்கு சீல்

நீலகிரி: குன்னூரில் விதிமுறைகளை மீறி கட்டிய பங்களாவிற்குச் சீல்வைக்கப்பட்டது.

bungalow sealed in coonoor
bungalow sealed in coonoor

By

Published : Jun 20, 2020, 9:30 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் சமீபகாலமாக விதிமுறைகளை மீறியும் அனுமதியின்றியும் கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் குன்னூர் டைகர் ஹில் பகுதியில் விதிமுறைகளை மீறி 4000 சதுர அடியில் பங்களா கட்டப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் நகராட்சி அலுவலர்கள் ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின்பேரில் நகராட்சி அலுவலர்கள் பங்களாவுக்குச் சீல்வைத்தனர். அப்போது வீட்டில் தங்கியிருந்த உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தற்போது கரோனா பாதிப்பு உள்ள நிலையில், இரு அறைகள் மட்டும் தங்குவதற்கு விடப்பட்டு மற்ற அறைகள் சீல்வைக்கப்பட்டன.

இதையும் படிங்க:பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கோரி மனு!

ABOUT THE AUTHOR

...view details