தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆ.ராசாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கன்ஃபார்ம்! ஆரூடம் சொல்லும் உதயநிதி - uthayanithi

நீலகிரி: மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவை வெற்றிபெறச் செய்தால் அவர் எம்.பி. மட்டும் அல்ல; மத்திய அமைச்சராகவும் இருப்பார் என நீலகிரியில் பரப்புரையின்போது உதயநிதி ஸ்டாலின் ஆரூடம் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

By

Published : Mar 27, 2019, 4:23 PM IST

நீலகிரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் உதகையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்து மோடியை பிரதமராக்கியது போன்ற தவறை இந்தத் தேர்தலிலும் மக்கள் செய்யக் கூடாது.

மத்தியில் ஆளும் மோடி ஆட்சியையும், தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியையும் கட்டாயமாக அகற்ற வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஆ.ராசாவை வெற்றிபெறச் செய்தால் அவர் எம்.பி. மட்டும் அல்ல; மத்திய அமைச்சராகவும் இருப்பார்.

தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். வீரர்களுக்கே பாதுகாப்பு அளிக்காத மோடி எப்படி நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்” என்றார்.

உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details