65 சதவித வனப் பகுதியை கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி பூங்கா, நீலகிரி வன கோட்டம், கூடலூர் வன கோட்டம் ஆகிய வனப் பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் வன கொள்ளை, வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றை தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் வனக் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதற்காகவும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக சமீப காலமாக மோப்பநாய்கள் பயன்படுத்தபடுகின்றன.
தமிழ்நாடு வனத்துறைக்கு முதன் முதலாக 2017ஆம் ஆண்டு ஆபர் என்ற மோப்ப நாய் மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கபட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கபட்டு வந்த இந்த நாய் உடல் நலக்குறைவு காராணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது காலிகன் என்ற ஆண் மோப்பநாயும், அதவை என்ற பெண் மோப்பநாயும் நீலகிரி,கூடலூர் வன கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்ப நாய்கள்! - nilgris sniffer dog
நீலகிரி: வைகை வனத்துறை பயிற்சி கல்லூரியில் சிறப்பு பயிற்சி பெற்ற காலிகன், அதவை என்ற இரண்டு மோப்பநாய்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தடைந்தன.
![நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்ப நாய்கள்! நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்பநாய்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12069488-thumbnail-3x2-nil.jpg)
நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்பநாய்கள்
நீலகிரிக்கு வந்தடைந்த இரண்டு மோப்பநாய்கள்
இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு: நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்!