நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் பகுதிக்கு உட்பட்ட பவானி எஸ்ட்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (70). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பணி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த காட்டெருமை ராமையாவை தூக்கி வீசியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ராமையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுற்காக குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.