தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுமலை காப்பகத்தில் புலி இறந்த விவகாரம்: வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் - two forest officers suspended for tiger death

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி இறந்த விவகாரத்தில் வனத்துறை ஊழியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

two forest officers suspended for lately identifying tiger death
two forest officers suspended for lately identifying tiger death

By

Published : Apr 20, 2020, 3:05 PM IST

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், மசினகுடி வனச்சரகம் ஹவரல்லா வனப்பகுதியில் கடந்த 13ஆம் தேதி 5 வயது ஆண் புலி நீரோடையில் இறந்து கிடந்தது.

இதனை அந்த வழியாக ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்து வனத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்டையில் அரசு கால்நடை மருத்துவர்கள், புலியின் உடலை உடற்கூறாய்வு செய்தனர். அதில் புலி இறந்து பல நாள்கள் ஆனாது தெரியவந்தது. புலி இறப்பிற்கான காரணத்தை அறிய அதன் பாகங்கள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பத்தில் புலி இறப்பு

இதனிடையே, முதுமலை துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையில், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன், வன உயிரின நிதி ஆலோசகர் மோகன்ராஜ், ஊட்டி கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு, புலியின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்த கால்நடை மருத்துவர்கள் வன ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், புலி இறந்த சம்பவத்தை தாமதமாக கண்டுபிடித்ததற்காகவும், ஜிபிஆர்எஸ் கருவியானது புலி இறந்த இடத்தில் சில நாள்களாகவே சிக்னல் காட்டவில்லை என்பதால் அங்கு யாரும் ரோந்து செல்லவில்லை என்பதையும் விசாரணைக் குழு உறுதி செய்தது. பின்னர், இச்சம்பவம் தொடர்பாக முதுமலை வனக்காப்பாளர் சசிதரன், வனக்காவலர் நாகபூஷணம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வனச்சரகர் மாரியப்பன், வனவர் சித்தராஜ் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, 'சார்ஜ் ஷீட்' வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் வனக்காப்பாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details