உதகை:சமீப காலமாகப் பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர்பாராத விதமாக அளவுக்கு அதிகமான மழை, வெயில் எனப்பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்வதால் கடும் வெள்ளப்பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மண் அரிப்பு, நிலச்சரிவு என பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
இதனையடுத்து மாறி வரும் காலநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக்குறைத்து விவசாய நிலங்கள் மற்றும் மண் வளத்தைப் பாதுகாக்க இனி வரும் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மாற்றும் ஆராய்ச்சிகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு உதகையில் தொடங்கி உள்ளது.