நாட்டின் பல்வேறு இடங்களிலும் தீயணைப்புத் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் இன்று (ஏப்ரல் 15) தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், அங்கு வைக்கப்பட்ட நினைவு தூணில் தீயணைப்புத் துறையினர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.