இந்தியா முழுவதும் பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் தொகையைக் கொண்டு பஞ்சாயத்து நிர்வாகங்கள் தண்ணீர் இணைப்பு, சாலை வசதி, சமுதாயக் கூடம் என பழங்குடியின கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட செங்கல்புதூர், பம்பலக்கோம்பை, சின்னாலக்கோம்பை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்காக பல்வேறு திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.