நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காடுகளின் மத்தியில் பசுமையாக அமைந்துள்ளன பழங்குடியின கிராமங்கள். பெரும்பாலும் பழங்குடியின மக்கள் பலா, தேன் எடுத்தல், குருமிளகு உள்ளிட்ட தொழில்கள் செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. நகர் பகுதிக்கு செல்லவே அச்சமடைந்துள்ளனர். அவர்களின் கிராமத்திற்குள் வெளி ஆள்களை அனுமதிப்பதில்லை. தன்னார்வலர்கள் உதவியுடன் காப்பி நாற்றுகள் தயாரித்து விற்பனை செய்து பிழைத்துவருகின்றனர்.
ஊரடங்கால் நிலைகுலைந்த பழங்குடி கிராமங்கள்: அத்தியாவசிய பொருள்களுக்கு அவதி!
நீலகிரி: கரோனா அச்சம் காரணமாக பழங்குடி கிராமத்திற்குள் வெளி ஆள்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்துவருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழலில் சந்திக்கும் இன்னல்கள் குறித்து அப்பகுதியினர் கூறுகையில், “ஊரடங்கினால் அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதற்கு கூட சிரமமாகவுள்ளது. வாகன வசதியில்லை, இதனால் மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய பொருள்களைக் கிடைக்கச் செய்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்றனர். அரசு விரைந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வாழ்வாதாரம் மேம்பட உதவும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர், குன்னூர் பகுதி பழங்குடிகள்.
இதையும் படிங்க: தரமற்ற விதையால் விளைந்த கரோனா தக்காளி - விற்பனையாகாமல் விவசாயி தவிப்பு