நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பம்பலக்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 42 குடும்பம் தைலம் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் கரோனா ஊரடங்கு காரணமாக சென்ற ஏழு மாதமாக வேலையின்றி தவித்துவருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது காலநிலை மாற்றம் காரணமாக யூகலிப்டஸ் மரங்களில் இலைகள் அனைத்தும் கொட்டியதால், தற்போது தைலம் காய்ச்சும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.