நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்டது செங்கல் புதூர் பழங்குடியினர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு தொகுப்பு வீடுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 5 ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில், வீடுகள் முழுமை பெறாத நிலையில் உள்ளது.
தொகுப்பு வீடுகளின் பணியை முடித்து அடிப்படை வசதி அமைக்க பழங்குடியினர் கோரிக்கை
நீலகிரி: பழங்குடியினர் கிராமத்தில் மக்கள் வசிக்கக் கூடிய பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடியினர் பாதிப்படைந்து வருகின்றனர்.
Tribal people request to fulfill their basic needs
மழைக்காலங்களில் பழங்குடியினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகுவதால் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்தி வீடுகளை கட்டி முடிக்கவும், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.