கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள்ளும் சாலைகளில் உலாவருவது அதிகரித்து உள்ளது.
வலையில் சிக்கிய சிறுத்தை: மீட்டெடுத்த வனத் துறை - வலையில் சிக்கிய சிறுத்தைட
நீலகிரி: வலையில் சிக்கிய சிறுத்தையை சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத் துறையினர் மீட்டனர்.
pantar
இதனையடுத்து குன்னூர் அருகே உள்ள மட்டகண்டி பகுதியில் குடியிருப்புக்கு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள கம்பி வேலியில் 9 வயதுடைய சிறுத்தை குட்டி ஒன்று சிக்கிக் கொண்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனே வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் விரைந்துவந்து கம்பி வேலியில் சிக்கிக்கொண்ட சிறுத்தையை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டெடுத்தனர். அதன் பின் அந்தச் சிறுத்தையை அடர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.