நீலகிரி:ஊட்டிக்குச் செல்லும் பெரும்பான்மையானச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கியப் பொருளாக ஊட்டி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை இருந்து வருகிறது.
இந்நிலையில்,கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு, அடர்லி, ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை இரயில் பாதையில் விழுந்தன.
தண்டவாளங்கள் சேதமடைந்ததால், மலை இரயில் சேவைக் கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்று இன்று மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை இரயில் ஒரு மாத இடைவேளைக்குப் பிறகு இயக்கப்பட்டது. இதன் காரணமாக ஊட்டியைச் சார்ந்த மக்களும்,ஊட்டிக்கு வரயிருக்கும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
’ஊட்டி - மேட்டுப்பாளையம்’ ரயில் சேவை மீண்டும் தொடக்கம் இதையும் படிங்க:Building Collapse: கட்டட விபத்தில் காவலர் மரணம்: டிஜிபி சைலேந்திரபாபு அஞ்சலி