தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வுசெய்யப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் கட்டாயம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உள்ளூர் பகுதிகள், கிராமங்களுக்கு மட்டும் 20 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. தற்போது அத்தியாவசிய தேவைக்காகப் பொதுமக்கள் ஏராளமானோர் குன்னூர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்களில் பலரும் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் இருப்பதால், இது குறித்த விழிப்புணர்வை, குன்னூர் நகர போக்குவரத்து காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க காவல் துறை விழிப்புணர்வு! - குன்னுார் சுற்றுலாத்தலம்
நீலகிரி: குன்னூர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குன்னூர்
போக்குவரத்து ஆய்வாளர் முரளி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர பெள்ளி உள்பட போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் போன்று கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது.