தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் தொடர் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..! - நீலகிரியில் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில் தொடர் கனமழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!
நீலகிரியில் தொடர் கனமழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

By

Published : Jun 13, 2022, 6:44 AM IST

நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ரெலியார் அணை நீர்மட்டம் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக கோடை காலங்களில் குன்னூர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் தொடர் கனமழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

’கேரட்’, ‘பீட்ரூட்’, ‘முட்டைக்கோஸ்’, ’உருளைக்கிழங்கு’ உள்ளிட்டவைக்கும் தேயிலை விவசாயத்திற்கும் தற்போது இந்த கனமழை அதிக மகசூலை பெற ஏதுவாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டுயானை..!

ABOUT THE AUTHOR

...view details