நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் காட்சிக்காக வைக்க போரில் பயன்படுத்தபட்ட பழமையான அர்ஜுனா பீரங்கியானது பிகார் மாநிலத்திலிருந்து லாரியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா வழியாக உதகை - கூடலூர் மலைப்பாதைக்கு வந்ததடைந்தது.
லாரியில் அதிக பாரம் வைக்கப்பட்டுள்ளதால், மலைப்பாதை வளைவு மேடுகளில் முன்னேற முடியாமல் திணறியது. அப்படி மெதுவாக ஆங்காங்கே நின்று நின்றுச் சென்றது.