நீலகிரி: கூடலூா் புத்தூா் வயல் பகுதியைச் சேர்ந்த பழங்குடி விவசாயிகள் துலாம் மாதத்தில் (ஐப்பசி மாதம்) விரதம் இருந்து, புதிதாக விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு எடுத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நேற்று (அக்.28) விவசாயிகள் அறுவடை செய்த கதிர்களை அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி, புத்தரி திருவிழாவைக் கொண்டாடினர். இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தூர் வயல் தொரப்பள்ளி மேம்பாலக்கோடு உட்பட்ட பல்வேறு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்து பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். ஜீரகசால், கெந்தகசால், மர நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை இவர்கள் பயிரிட்டு வருகின்றனர்.