தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலக்கும் பைகாரா படகு இல்லம் - சவாரி செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப்பயணிகள் - உதகை பைகாரா படகில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி: உதகை பைகாரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

pykara boat
pykara boat

By

Published : Dec 8, 2019, 7:29 PM IST

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான உதகையில் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறையைக் கொண்டாட, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதோடு பைகாரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பளிச்சென்று கண்ணாடி போல் தூய்மையாக காட்சியளிக்கும் நீரில், படகு சவாரி செய்வதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.

பைகாரா படகில் சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகளுக்காக அதிவிரைவு படகுகளும் இயக்கப்பட்டு வருகிறது. பைகாரா படகில் நீரைக் கிழித்துச் செல்லும் அழகை ரசித்தும்; இயற்கைக் காட்சிகளைப் பார்த்தும் சுற்றுலாப் பயணிகள் மெய்சிலிர்த்து போகின்றனர்.

இதையும் படிங்க: கொலைக் குற்றவாளிகள் தண்டனை பெற உதவியவர்களுக்கு திருச்சியில் பாராட்டு விழா!

ABOUT THE AUTHOR

...view details