நீலகிரி மாவட்டம், உதகையில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். அங்கு தங்கும் விடுதிகள், லாட்ஜ் போன்றவைற்றில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பியுள்ளனர். இதனால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் சாலையோரங்களிலும், வாகனங்களிலும் படுத்து உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உதகையில் தங்கும் விடுதிகளில் இடமில்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி! - Tourist
நீலகிரி: குன்னூரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதிகளில் இடமில்லாமல் ஏராளமானோர் சாலையில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உதகையில் தங்கும் விடுதிகளில் இடமில்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி
இவ்வாறு உறங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு முறையான கழிப்பிடம், குளியலறை, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும், நகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்காததால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அவல நிலையை போக்க போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்று, சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.