நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. புத்தாண்டை கொண்டாட தமிழ்நாடு, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குன்னூர் பகுதிக்கு நேற்றுமுதல் படையெடுத்துள்ளனர். இதனால் குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் களைகட்டியுள்ளன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாண்டையொட்டி குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - tourists gathered in Coonoor on New Year's Eve
நீலகிரி: புத்தாண்டு விடுமுறையையொட்டி குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
tourist
குன்னூரின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக விரோத கூடாரமாக மாறிய குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையம்