நீலகிரி: நடப்பு அக்டோபர், வரும் நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தொடங்கும் இரண்டாவது சீசனுக்காகவும், மாநிலமெங்கும் பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டியும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் ஒருபகுதியாக, குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. மேலும், இங்கு நிலவும் இதமான காலநிலை காரணமாகவும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஆதிவாசிகள் குடியிருப்பு வனவிலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.