கரோனா தாக்கம் குறைவு காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி உதகையில் இ-பாஸ் முறை ரத்து செய்யபட்டு இ- பதிவு முறை கொண்டுவரப்பட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி: உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - Government Botanical Gardens Ooty
நீலகிரி: தீபாவளியை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
tourists-crowd-increased-to-ooty
அத்துடன் இன்று (நவ.14) தீபாவளி என்பதால், காலை முதலே சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்காவில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் தகுந்த இடைவெளியை பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உதகை மான் பூங்காவை நிரந்தரமாக மூட முடிவு!