தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள் - tourists crowd in coonoor

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்
குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்

By

Published : May 4, 2022, 10:59 AM IST

Updated : May 4, 2022, 2:16 PM IST

நீலகிரி: ஏப்ரல், மே மாதம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், கோடை சீசன் என்பதாலும் ஊதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில், குன்னூரில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா துறை சார்பாக கண்காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை சீசனுக்காக அனைத்து பூங்காக்கள் பொழிவுபடுத்தப்பட்டுள்ளது.

குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்

சிம்ஸ் பூங்காவில் சாரல் மழையில் நனைந்தவாறு சுற்றுலா பயணிகள் இதமான சூழ்நிலை அனுபவித்து வருகின்றனர் . குன்னூர் டால்பின் நோஸ், லேம் ஸ்ராக் ஆகிய இடங்களில் இயற்கை காட்சியை ரசிக்கவும், கெத்ரின் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தும் வருகின்றனர். குன்னூரில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:Ooty flower show 2022: மலர் கண்காட்சிக்குத் தயாராகும் ஊட்டி

Last Updated : May 4, 2022, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details