தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக உதகை, குன்னூர் பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வாடகை வாகன ஓட்டுநர்கள், கடைகளில் கூட்டம் அலைமோதியது.