தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டம்
சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

By

Published : Aug 24, 2020, 5:59 PM IST

நீலகிரியில் கரோனா பாதிப்பால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (ஆக. 24) ஓட்டுனர்களுக்கு பத்து ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், காப்பீட்டு தொகை செலுத்த கால அவகாசம் வேண்டும், காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

அப்போது போராட்டக்காரர்கள் மாநில அரசு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேயிலை விவசாயம் கடும் பாதிப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details