தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்' - நீலகிரி மாவட்ட ஆட்சியர் - இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் விரைவில் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்ட ஆட்சியர்

By

Published : Nov 30, 2020, 3:26 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் 17ஆம் தேதிமுதல் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஊரடங்கு தளர்வு காரணமாக, தற்போது படிப்படியாகச் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.

முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட தோட்டக் கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆறு சுற்றுலாத் தலங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால் தொட்டபெட்டா, முதுமலை, படகு இல்லம் போன்றவை திறக்கப்படாமல் உள்ளன. அவற்றைத் திறக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் உதகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ”நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணை கிடைத்தவுடன் திறக்கப்படும்.

மேலும் நீலகிரிக்கு வரும் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தினருக்கு E-ரிஜிஸ்டேசன் கட்டாயம் தேவை. சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் ரூ.40 ஆயிரம் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details