நீலகிரி:கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் காரணமாக தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இங்கு நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களைக் கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
அந்தவகையில், குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஆதிவாசிகள் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்து வருகின்றனர்.