நீலகிரி: உதகைக்கு கார் மூலம் சுற்றுலா வந்த கேரள மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கே.எம்.எஸ் என்ற இடத்தில் நிலைதடுமாறி அருகில் இருந்த டீக்கடைக்குள்,அவர்களது கார் புகுந்து விபத்து ஏற்பட்டது.
உதகைக்கு சுற்றுலா வந்த கார் விபத்து - கேரளாவைச் சேர்ந்த 9 பேருக்கு காயம் - சுற்றுலா வந்த கார் விபத்து
குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வந்தவர்களின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் சிறுகாயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
Etv Bharat
இதில் காரில் பயணம் செய்த ஒன்பது பேரும் சிறுகாயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும், காரை ஓட்டி வந்த ரஞ்சித்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தொழில்போட்டியின் காரணமாக சிசிடிவியை உடைத்தவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு