ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்ததால், ஒரே நாளில் உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.